Popular Posts

Sunday, October 24, 2010

மூடநம்பிக்கை!!!!!!!


                  என் வாழ்கையில் நடந்த மறக்க முடியாத கசப்பான நிகழ்ச்சி ஆனால்  இன்று நினைத்து பார்த்தால் சிரிப்பு வருகிறது... என் உறவினர் ஒருவர் என் அம்மாவின் உடல் நலம் சரி இல்லாதலால் விழுப்புரம் அருகில் இரயானுர் கோவில்க்கு  சென்று சாமியாரிடம் பூஜை செய்தால் நோய் குணமாய்விடும் என்று என் குடும்பத்தை அழைத்து சென்றார். அங்கு போன பிறகுதான் உணர்ந்தேன் அது என் காதலை முறிக்க என்று.
              அந்த சாமியார் அருள்வாக்கு என்ற பெயரில் படு தமாஷ் பணினார். நீ காதலிக்கும் ஆண் கெட்டவன் உன்னை ஏமாற்றி விடுவான் அவனுக்கு பல பெண்கள்  தொடர்பு இருக்கிறது. அவன் ஒரு நாத்திகன் என்று  உண்மைக்கு புறம்பாக கூறினார். என்னவனுக்கு தெய்வ பக்தி அதிகம் என்பதும், அவன் என் மீது கொண்டுள்ள அன்பு   எவ்வளவு  அதிகம் என்பதும்  எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை என் பெற்றோருக்கும் மற்றவர்களுகும் நிருபிக்க வேண்டும் என்று என்னவனை உடனே சென்னையிலிருந்து  புறப்பட்டு வரும்படி sms  அனுப்பினேன் அவரும் 200 km கடந்து பூஜை முடிவதற்குள் வந்து சேர்ந்தார்.(பூஜை 8000 ருபாய் என்னை காதலில் இருந்து காப்பற்ற )
            என்னவனை பார்த்ததும் சாமியாற்கு  விழி பிதுங்கி விட்டது.. அப்படியே அந்தர் பல்டி அடித்து விட்டார்.. அவரை  பார்த்து உன் உண்மையான அன்பை காப்ற்றிகொள்ள இவளவு தூரம் வந்திருக்கிறாய், என்னை நம்பினால் உங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கிறேன் என்று சமாளித்தார்.. நான் விடவில்லை சற்று நேரம் முன்பு இவனுக்கு பல பெண்களிடம்  தொடர்பு இருகின்றது என்னை இவன் ஏமாற்றி விடுவான் என்று சொன்னிர்களே..என்றதற்கு இவர் நினைக்கவில்லை ஆனால் பல பெண்கள் இவரை தூண்ட  நினைகிறார்கள் என்று தமாஷ் பணினார். அதற்கு என்னவன் இவளை தவிர நான் யாரிடமும் நட்பாக கூட பழகுவதில்லை என்று சத்யம் செய்ய தடுமாறினார் சாமியார்..
           இதை எல்லாவற்றையும் பார்த்த என் அப்பாவிற்கு சாமியாரின் குட்டும் என்னவனின் உண்மையான அன்பும் புரிந்தது , சாமியாரிடம் போதும் சாமி, யார் ஒருவனும் ஏமாற்ற நினைப்பவன் 200km இவளவு சிக்கிரம் வரமாட்டன் அதுவும் இவளவு தைரியமாக எல்லார் முன்னிலையில்  பேசமாட்டார். எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டார் என்று சந்தோசப்பட்டார்.
          சாமியாரின் உச்சகட்ட தமாஷாக, நான்  பண்ண பரிகார பூஜையின் பலன் இவளவு சிக்கிரம் பலித்துவிட்டது பாருங்கள் இது 100 வருசத்துக்கு ஒரு முறைதான் நடக்கும்  என்று ஒரு போடு போட்டாரே செம தமாஷ் .!!!!
        சற்றே சமுதாய சிந்தனையோடு சிந்தித்து பார்த்தால்  ,அந்த  கிராமத்தை சேர்ந்த பெண்ணிருக்கு இப்படி ஊர் மக்கள் முன்னால் அருள்வாக்கு சொல்லிருந்தால், அப்பெண்ணின் எதிர்காலம்  கேள்விகுறிதான். ஊர் முழுக்க அப்பெண் பற்றிய வதந்தி பரவி அவளின் எதிர்காலம் மோசமாக இருந்திருக்கும் தற்கொலைக்கு கூட வழிவகுக நேரிடும்  அல்லது என்னையே எடுத்து கொண்டால்  அன்று மட்டும் என்னவன் வரவில்லை என்றால் என் அப்பா அந்த சாமியார் பேச்சை நம்பி கடைசிவரைக்கும் எங்கள் திருமனதிருக்கு ஒத்து கொண்டிருக்கமாட்டார். எங்கள் வாழ்க்கையும் கேள்விகுரியகதான் இருந்திருக்கும்.... முடனம்பிகையை ஒழிப்போம்  !!!!!!!

3 comments:

  1. wat a beautiful love story which has message for the society ....hail agila and magi jodi ...all the best for ur future

    ReplyDelete
  2. wow... super da... great love story...

    ReplyDelete